Ravichandran Ashwin Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு..!

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ravichandran Ashwin Ram Mandir Invitation (Photo Credit: @ANI X)

ஜனவரி 19, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா (Ram Mandir Pranpratishtha) நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், மந்திரிகள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Xiaomi Mix Flip Smartphone: சந்தையில் புதிய பிலிப் மொபைல்.. மாஸ் காட்டப்போகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு: இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு (Ravichandran Ashwin) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தோனி மற்றும் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement