Ravichandran Ashwin (Photo Credit : @MSDian067 X)

ஆகஸ்ட் 27, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், ஆல்ரவுண்டர் என பல பெருமைகளை கொண்டவர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin). தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அஸ்வின், இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக இதுவரை விளங்கி இருக்கிறார். இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்காக, தனது அளப்பரிய பங்குகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தவர் :

தற்போது வரை சர்வதேச அளவில் 106 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், தற்போது வரையில் 1,523 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 9,615 ரன்களை இந்திய அணிக்காக வெவ்வேறு போட்டிகளில் பெற்றுக்கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல்வேறு வெற்றிக்காக அஸ்வின் உறுதுணையாக இருந்துள்ளார். Asia Cup 2025 Afghanistan Squad: ஆசிய கோப்பை 2025; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.., ரஷீத் கான் கேப்டன்..! 

ஐபிஎஸ் போட்டிகளில் ஒய்வு :

கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்காக பல கட்டங்களில் தனது பங்களிப்பை வெளிப்படுத்திய அஸ்வினுக்கு, மத்திய அரசு அர்ஜுனா விருதும் வழங்கி கௌரவித்து இருந்தது. முன்னதாக அவர் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் தன்னை ஐபிஎல் போட்டிகளில் இனி ரசிகர்கள் பார்க்க முடியாது எனவும் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் அஸ்வின் ரவிச்சந்திரன் விளையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒய்வு குறித்த அறிவிப்பு :