Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 08, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 38) என்பவர், 3வது மைல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த 5 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்தனர். Breaking: மாணவர்களுக்கு குஷி செய்தி.. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. புதிய மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.!

பூசாரி வெட்டிக்கொலை:

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 07) இரவு கோவில் பூஜைகளை முடித்துவிட்டு ரவி தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சேதுபாதை சாலையில் சென்றபோது, ​​அவரை வழிமறித்த 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் (Murder) கொன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக, தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணை:

விசாரணையில், பூசாரிக்கும் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், அதுவே இந்த கொலைக்கு காரணம் என்பதும் தெரிய வந்தது. இந்த முன்விரோதத்தின் காரணமாகவே, அந்த சிறுவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ரவியை வெட்டிக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்த சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.