ZIM Vs AFG 1st T20I: முதல் டி20 போட்டியில் ஆப்கானை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி..!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ZIM Vs AFG 1st T20I (Photo Credit: @BlockEthPioneer X)

டிசம்பர் 12, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 (ZIM Vs AFG) தொடரின் முதல் போட்டி, நேற்று (டிசம்பர் 11) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (Harare) மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. RSA Vs PAK 1st T20I: முதல் டி20 போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய ரிஸ்வான்.. தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் டக் அவுட், செதிலுகுல்லா அடால், முகமது இஷாக் ஆகியோர் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். மறுபுறம், அதிரடியாக விளையாட முயன்ற ஹஸ்ரதுல்லா ஸஸாய் 20 ரன்களிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கரிம் ஜனத் - முகமது நபி இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில், கரிம் ஜனத் (Karim Janat) சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ங்கரவா (Richard Ngarava) 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர், 145 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென்னட்டுடன் இணைந்து தியான் மேயர்ஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இருவரும் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர்.

அதன்பின் தியான் மெயர்ஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, பிரையன் பென்னட் (Brian Bennett) 49 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வய்ப்பை தவறவிட்டார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பிரையன் பென்னட் பெற்று சென்றார்.