டிசம்பர் 12, டெல்லி (Special Day): உலகத்தில் உள்ள எந்த பகுதியாக இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவான சுகாதாரத்தினை வழங்க வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையில் ஒரு மனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளினையே உலகெங்கிலும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினமாக (Universal Health Coverage Day) கடைப்பிடித்து வருகின்றனர்.
சுகாதாரம் என்பது மனித வாழ்வின் ஆதாரம். ஒவ்வொரு தனி மனிதருக்கும் சுகாதார பாதுகாப்பினை அளிக்க வேண்டும். அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தினை உருவாக்க வேண்டும். உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மக்களினை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சுகாதார பாதுகாப்பு அளிப்பதினையை உலக நாடுகள் வலியுறுத்துகிறது. உணவு குடிநீர் காற்று இருப்பிடம் வாழும் முறை என எல்லாவற்றிலும் சுகாதாரம் பேண வேண்டும். இவையே இந்த நாளின் முக்கியத்துவம் ஆகும். Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம் 2024: உள்ளம் கவர்ந்தவருடன் கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!
இந்த நாள் சுமார் 70 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் பல நாடுகளில் இன்னமும் சுகாதாரம் சரிவர இல்லை. அதற்கு அந்தந்த நாடுகள் பொறுப்பேற்று அதற்கான தீர்வினை நோக்கி நகர வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இது குறித்து விழிப்படைந்து இந்த நாளினை கடைபிடிக்க வேண்டும்.