டிசம்பர் 11, டர்பன் (Sports News): தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் (RSA Vs PAK) விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டி டர்பனில் (Durban) நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கிளாசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, ஷாகீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே வான் டெர் டூசன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். MS Dhoni Rides Bike: ஹெல்மெட் எங்கே? வீடியோ எடுத்தவரை பார்த்து கேள்வி கேட்ட 'தல' தோனி..!
இதனைத்தொடர்ந்து வந்த ப்ரீட்ஸ்கே பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மத் வீசிய 2வது ஓவரில் 8 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரிக்ஸ் 8 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார். மறுபுறம் மில்லர் (David Miller) அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லிண்டே 24 பந்துகளில் 48 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகீன் அப்ரிடி (Shaheen Afridi) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி முதல் 6 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. அதன் பின் கேப்டன் ரிஸ்வான் (Mohammad Rizwan) மந்தமாக விளையாடி 50 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதனால் கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 60 ரன்கள் தேவையாக இருந்தது. பின்னர், லிண்டே வீசிய 18வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி, இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஜார்ஜ் லிண்டே (George Linde) பெற்று சென்றார்.