டிசம்பர் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு இல்லை. ஆனால் இதன் காரணமாகவே கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய வானிலை (Today Weather):
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.க்கு மேல் மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. Rajinikanth Birthday: "அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்..!
நாளைய வானிலை (Tomorrow Weather):
நாளை (டிச.12) தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புயலின் நகர்வுகளை நேரலையில் காண: