Sudan Civil War (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 12, கார்டூம் (World News): சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அங்க ராணுவ ஆட்சியை நடைபெற்று வந்தது. ஆனால் மீண்டும் ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர். இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. Syria Civil War: தலைமறைவான சிரியா அதிபர் என்ன ஆனார்..? தொடரும் உள்நாட்டுப் பிரச்சனை..!

இந்தப் போரினால் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். போரை நிறுத்த இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. தொடர்ந்து இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைக்காததால் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர். இதற்கு இவர்கள் பதிலடி கொடுப்பர். இதனால் சூடானில் உள்நாட்டு போர் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.