Raining School Holiday (Photo Credit: @behindwoods X)

டிசம்பர் 12, சென்னை (Chennai News): வானிலையில் (Weather) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.11ம் தேதி) காலை 8.30 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இவை மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Holiday) அறிவிப்பு:

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 13) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. School College Leave: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகள், 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கனமழை, வெள்ளத்தால் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

அரையாண்டுத் தேர்வுகள் தள்ளிவைப்பு (Half Yearly Exam Postponed):

இந்த விடுமுறை அறிவிப்பால் பள்ளிகளில் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், “கனமழை காரணமாக 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு இன்று ஆங்கில தேர்வு நடக்கவிருந்த நிலையில், அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடத்துவதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.