டிசம்பர் 12, சென்னை (Cinema News): 70 முதல் இன்று வரை சுமார் 50 ஆண்டிற்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவரின் பிறந்த நாளினை இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பலர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அப்படி சரித்திரத்தில் பெயர் பிடித்த இவர் ஆரம்பித்தது என்னவோ சாதாரண கண்டக்டர் ஆக தான்.
வரலாறு: 1975 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக இருந்த ஒருவர், தன்னுடைய ஸ்டைலால் பலரைக் கவர்ந்து, "நீ சினிமாவை நோக்கி செல்" என்று பலர் கூறியதின் காரணத்தால், தனது சினிமா வாழ்க்கைக்கு காலடி எடுத்து வைத்தார். அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகி இன்று அபூர்வமாக வளர்ந்துள்ளார். அறிமுக படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், படத்தின் திருப்புமுனையாக இருந்தது அவரது கதாபாத்திரம். சிவாஜிராவ் என்ற இவரது இயற்பெயரையும் சினிமாவிற்காக ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்தார் பாலசந்தர். ஆரம்பத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தவர், ஹீரோவாக உருவெடுத்தார். இருப்பினும் 'சுதா சங்கமா', 'காயத்ரி', 'மூன்று முடிச்சு', '16 வயதினிலே', 'எந்திரன்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் முத்திரை பதித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்று அவருக்கு போட்டியாக இருந்தது கமல்ஹாசன் தான். ஆனால் தன்னுடைய ஸ்டைலான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கினார். கமல்ஹாசனோடு இணைந்து 16 வயதினிலே, அவள் அப்படித்தான், ஆடு புலி ஆட்டம், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சுமார் 18 திரைப்படங்கள் வரை நடித்திருக்கின்றார் ரஜினி. நடிகராக மட்டுமே அறியப்பட்ட ரஜினிகாந்த்தின் அதிகம் அறியப்படாத இன்னொரு முகம் பாடகர் முகம். 1993 ஆம் ஆண்டு வெளியான 'மன்னன்' படத்தில் 'அடிக்குது குளிரு', 2013-ல் வெளியான 'கோச்சடையான்'-ல் 'எதிரிகள் இல்லை' ஆகிய பாடல்களை பாடியுள்ளார். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசனின் மிட்வீக் எவிக்சன்.. வெளியேறப் போவது யார்?
சூப்பர் ஸ்டார்: நடிகர் ரஜினிகாந்திற்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் 'பைரவி' திரைப்படத்தில்தான் கிடைத்தது. இந்த பட்டத்தை அவருக்கு வழங்கியவர் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு. 'நான் போட்ட சவால்' என்ற திரைப்படத்தில் இருந்துதான் இந்த பட்டம் அடுத்தடுத்த படங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டது. நியான் சிவப்பு புள்ளிகளோடு 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் பயன்படுத்த ஆரம்பித்தது 'அண்ணாமலை' படத்தில்தான்.
ரஜினி நடித்த ஓரே ஆங்கிலப் படமான 'பிளட் ஸ்டோன்' 1988இல் வெளியானது. ஒரு வைரக்கல் பற்றிய இந்திய அமெரிக்க வாழ் கதை இது. இப்படத்தை இயக்கி இருந்தவர் நிக்கோ மாஸ்ட்ரோகிஸ் என்ற ஆங்கில இயக்குனர். தொடர்ந்து பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். கருப்பு வெள்ளை, கலர், 3டி, அனிமேஷன் என எல்லா விதமான சினிமா தொழில்நுட்பகளிலும் நடித்து பெருமை பெற்றவர். பத்மபூஷன், பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே, கலைமாமணி விருது இவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் நீண்டது.
அரசியல் வாழ்க்கை: இவரின் நல்மனதிற்காக இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர். அவரும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை அடுத்த இலக்கு என்றெல்லாம் கூறி இருந்தார். ஆனால் 2020-ல் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்து தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அரசியல் களத்தில் என்னதான் இல்லாவிட்டாலும், சினிமாவில் என்றும் கொடிகட்டி பறந்து வருகின்றார். மூன்று தலைமுறை ரசிகர்களை தனது ஸ்டைலால் கட்டி போட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது வெறும் ஒரு பெயர் அல்ல... அது எக்கால ரசிகர்களும் சிலிர்த்து மகிழக் கூடிய ‘வைப்’.
"பேர தூக்க நாலும் பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.." என்ற பாடலுக்கு ஏற்ப கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் வரப்போகிறார் என்றால் அந்த இடத்திற்கு விளம்பரமே தேவையில்லை, மக்கள் கூட்டம் அங்கு அலை போல வந்திருக்கும். அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளினை முன்னிட்டு வெளியான வீடியோக்களின் சிறப்பு தொகுப்புகள்:
Wishing the icon of Indian cinema, the epitome of entertainment, and the super one, Superstar @rajinikanth, a very Happy Birthday!#HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/7zfFjOu7KN
— Sun Pictures (@sunpictures) December 11, 2024
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளினை முன்னிட்டு வெளியான வீடியோ:
Wishing the epitome of mass, the one and only Superstar @rajinikanth , a very Happy Birthday!🔥#HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #SunTV pic.twitter.com/X0rY0J5XYT
— Sun TV (@SunTV) December 12, 2024
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளினை முன்னிட்டு வெளியான வீடியோ:
Happy birthday Engal Anbu Manithar Superstar @rajinikanth Sir!! ♥️
May you be blessed with good health, and a long and happy life ✨#SuperstarRajinikanth #HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/gY3vjpOOxy
— AVM Productions | AVM Studios (@avmproductions) December 12, 2024