Road Accident: லாரி மோதி 2 குழந்தைகள் பலி.. கோயிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்!

திருப்பத்தூர் அருகே புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.

Accident File Pic (Photo Credit: PTI)

ஜனவரி 02, திருப்பத்தூர் (Tirupathur): திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் விவசாயி பரந்தாமன் (வயது 47). இவர் தன்னுடைய மனைவி காவேரி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேற்று சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஆம்பூர் அருகே மாராப்பட்டு என்ற இடத்தில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, இவர்களின் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த கார்த்திகா (வயது 8), பேரரசி (வயது 5) ஆகிய 2 குழந்தைகள் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். Tambaram Shocker: சாட்சியை அழிக்க மெடிக்கல் கடை உரிமையாளர் கொடூர கொலை; மாமூல் கேட்ட ரௌடியின் ஸ்கெட்ச்சில் பலியான அப்பாவி.. கொலையாளிகளுக்கு மாவுக்கட்டு.!

மேலும் இந்த விபத்தில் பரந்தாமன் அவரது மனைவி காவேரி, மூத்த மகள் இளவரசி (வயது 12) ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement