Accuse Manikandan - Surya - Sarath (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஜனவரி 02, தாம்பரம் (Chennai Crime News): சென்னையில் உள்ள தாம்பரம், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் அங்குள்ள பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் குமாரின் (Medical Shop Owner Killed) கடைக்கு சென்ற ரௌடி சிலம்பரசன் என்பவர், கடையை பிரச்சனை இன்றி நடத்த மாதம் ரூ.50 ஆயிரம் மாமூல் தர வேண்டும் என கேட்டுள்ளார். மெடிக்கல் கடை உரிமையாளர் மாமூல் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, போனில் தொடர்புகொண்டு வினோத் குமார் சிலம்பரசனால் மிரட்டப்பட்டார்.

வெளியான ஆடியோவால் சிக்கிய ரௌடி: இந்த விஷயம் குறித்த ஆடியோவும் அன்றைய நாட்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலம்பரசன் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளராகவும் இருந்து வந்தார். இந்த சர்ச்சை விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆடியோ விஷயமும் சூடேறியதால், வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன் கைது செய்யப்பட்டார். அவரின் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது ஜாமினில் சிலம்பரசன் வெளியே இருக்கிறார். Lee Jae Myung Stabbed: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் கொலை முயற்சி.. தென்கொரிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..! கத்தியால் கழுத்தில் குத்திய இளைஞர்.! 

வழக்கில் தப்பிக்க அதிர்ச்சி செயல்:  சிறை வழக்கை எதிர்கொண்டாலும் மாமூல் விவகாரத்தில் உறுதியாக இருந்த சிலம்பரசன், அதன்பின்னரும் பலமுறை மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் இறுதி வாதங்களை எட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை வினோத் தனக்கு எதிராக சாட்சி அளித்தால், தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணம் சிலம்பரசனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கை வாபஸ் பெறக்கூறி சிலம்பரசன் வினோத் குமாரை மிரட்டி இருக்கிறார்.

மூவர் கும்பலால் நடந்த கொடூரம்: புகாரில் உறுதியாக இருந்த வினோத் குமார், வழக்கை வாபஸ் பெற வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரௌடி சிலம்பரசன், தனது கூட்டாளிகள் மற்றும் உறவினர் மூலமாக கொலை செய்ய திட்டம்தீட்டி இருக்கிறார். தனது திட்டப்படி, கடந்த டிசம்பர் 30ம் தேதி வினோத் குமாரின் கடைக்கு கூட்டாளிகளை அனுப்பி, மாத்திரை வாங்குவது போல நோட்டமிட்டு இருக்கின்றனர்.

Medical Shop Owner Vinodh Kumar (Photo Credit: @selvinnellai87 X)

ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த சிலம்பரசன்: பின், கடையை மூடிவிட்டு வினோத் குமார் வீட்டிற்கு சென்றபோது, அவரை 3 பேர் கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், சிலம்பரசன் மற்றும் அவனது கூட்டாளிகளின் செயல் தெரியவந்தது. Child Died: 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி; பத்திரமாக மீட்கப்பட்டும் நடந்த சோகம்.! 

கீழே குதித்து எலும்பை முறித்துக்கொண்ட சம்பவம்: இவர்களை அதிகாரிகள் தேடியபோது, கொலையாளிகள் மூவரும் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்துள்ளனர். இவர்களை அதிகாரிகள் கைது செய்ய சுற்றிவளைத்தபோது, மூவரும் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இருவர் கால்களில் எலும்பு முறிந்தும், ஒருவர் கைகளை உடைத்துக்கொண்டும் அலறியுள்ளனர்.

சிலம்பரசனுக்கு வலைவீச்சு: இந்த கும்பலை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்து, மாவுக்கட்டு போடப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் மூவரும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரத், சிலம்பரசனின் உறவினர்கள் சூர்யா மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. கொலைத்திட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்த ரௌடி சிலம்பரசன் தலைமறைவாகியுள்ளதால், அவரை தேடும் பணி நடந்து வருகிறது.