Bomb Threat: சென்னை குளோபல் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்; கடிதத்தில் வந்த பகீர் தகவல்.!

சென்னை சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் பகுதியில் செயல்படும் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அது போலியானது என உறுதி செய்யப்பட்டது.

Global Hospital, Sholinganallur, Chennai (Photo Credit: www.gleneagleshospitals.co.in)

ஜூலை 19, பெரும்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குளோபல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இன்று குளோபல் மருத்துவமனைக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், "மருத்துவமனையில் (Bomb threat to a hospital in Chennai) வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிலமணிநேரங்களில் வெடித்து சிதறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Cuddalore Shocker: கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்; 3 பேரை எரித்துக்கொன்றது ஏன்?.. கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.! 

போலி வெடிகுண்டு மிரட்டல் அம்பலம்:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மருத்துவமனையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினர் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஒரு நபரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.