IT Woman Employee Sexual Harassment: ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; ஆம்னி பேருந்து கிளீனர் கைது..!

கோயம்புத்தூரில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த ஐ.டி. பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து கிளீனர் கைது செய்யப்பட்டார்.

Sexual Harassment (Photo Credit: Pixabay)

மே 31, கோயம்புத்தூர் (Coimbatore News): விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், கோயம்புத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் (IT Company) ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த வாரம், தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து கோயம்புத்தூர் செல்லும் ஆம்னி பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். Edinson Cavani Retirement: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு; உருகுவே கால்பந்து வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் சோகம்..!

இதனையடுத்து, கடந்த 28-ஆம் தேதி இரவு விருதுநகரில் இருந்து, கோயம்புத்தூர் செல்லும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்தார். மறுநாள் காலையில், கோயம்புத்தூர் காந்திபுரத்திற்கு பேருந்து வந்து சேர்ந்தது. அதிலிருந்து, ஒவ்வொரு பயணியாக கீழே இறங்கினர். இவரும், தனது பைகளை எடுத்துக்கொண்டு கீழே வர முயன்ற போது, பேருந்து கிளீனராக வேலை பார்த்து வரும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் (வயது 41) என்பவர், ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அவரது உறவினர்கள் மற்றும் உடன் பயணித்த சக பயணிகள் என அனைவரும் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர்.

பின்னர், இதுதொடர்பாக இவர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement