Edinson Cavani (Photo Credit: @FabrizioRomano X)

மே 31, மான்டிவீடியோ (Sports News): உருகுவேயின் மூத்த ஸ்ட்ரைக்கர் எடின்சன் கவானி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக மே 30-ஆம் தேதி அன்று (வியாழக்கிழமை) அறிவித்தார். 37 வயதான அவர் உருகுவேயின் கால்பந்து வரலாற்றில் சில பெரிய தருணங்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். மேலும், 2011 கோபா அமெரிக்காவில் (Copa America) அவர்களின் வெற்றியில் மிக முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.

கவானி 2008-யில் சர்வதேச கால்பந்து போட்டியில் அறிமுகமானார். உருகுவேயின் வரலாற்றில் 58 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும். உருகுவே அணிக்காக 136 போட்டிகளில் விளையாடிய 3-வது வீரராகவும் இருக்கிறார். கோபா அமெரிக்கா மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) உள்ளிட்ட சில முக்கிய போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கவானி தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் நடந்த 2010 FIFA உலகக் கோப்பை மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற 2018 FIFA உலகக் கோப்பையில் உருகுவே அணி நான்காவது இடத்தைப் பிடிக்க மிக முக்கிய காரணமாக இவர் இருந்துள்ளார். Young girl Poured Boiling Milk On The Boy: வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இளம்பெண்; கிண்டல் செய்ததால் ஆத்திரம்..!

2011 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தியது. இதில், கவானி அதிக கோல் அடித்த வீரராக இருந்தார். முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அவரது திறமை மிகவும் பிரபலமாக வைத்தது. இதனால்தான் அவர் உருகுவேயின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

தற்போது, போகா ஜூனியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'பல ஆண்டுகளாக தான் கற்றுக்கொண்டவைகளுக்கு முதலில் என் அணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உணர்ச்சிகரமாக நான் என் வாழ்நாளில் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும், வாழ்வில் உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.