College Girl Gang Rape: கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; காதலன் போக்சோவில் கைது..!
திருச்சியில் கல்லூரி மாணவியை அவரது காதலன் மற்றும் 4 நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 11, லால்குடி (Trichy News): திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர், புள்ளம்பாடி விடுதியில் தங்கி அரசு ஐடிஐ-யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). இவர் தனக்கு திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்து வந்துள்ளார். Students Admitted To Hospital: விளையாட்டுத்தனமாக கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள்.. 5 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மாணவியை, அவரது காதலன் சிலம்பரசன் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே மாருதி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து (Anaesthetic) கலந்து கொடுத்து, அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். மேலும், அதனை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துள்ளனர். பின்னர், நடந்தவற்றை வெளியே சொன்னால் இணையதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் உடலில் மாற்றம் நிகழ்வதை அறிந்த அவரது தாயார், மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, கடந்த மாதம் 31-ஆம் தேதி மாணவி நடந்த விஷயத்தையும், மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாகவும் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், லால்குடி மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காதலன் சிலம்பரசனை நேற்று (செப்டம்பர் 10) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.