Woman Doctor Dies By Suicide: கணவன்-மனைவி குடும்ப தகராறு; பெண் மருத்துவர் தற்கொலை..!

தேனியில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dead Body (Photo Credit: Pixabay)

ஜூலை 05, தேனி (Theni News): தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிமாலா (வயது 38). இவர், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் மருத்துவராக (Dermatologist) பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் மணிகண்டன் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மணிகண்டன் நடத்தி வரும் ஜவுளி தொழில் சம்பந்தமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. Coimbatore Shocker: குழந்தையை சேலையில் ஒருசேர முடிந்து தாய் தற்கொலை; கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சோகம்..!

இந்நிலையில், வழக்கம்போல நேற்றிரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் முற்றியது. பின்னர், இருவரும் உறங்க சென்றுள்ளனர். மணிகண்டன் அதிகாலை மனைவியின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு அவரது மனைவி தற்கொலை (Suicide) செய்துகொண்டதை அறிந்த அவர், உடனடியாக தனது மனைவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண் மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், மருத்துவர் மணிமாலாவின் தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement