Sexual Harassment: பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் – போக்சோவில் கைது..!

சிறுவனிடம் பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.

Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

மார்ச் 20, கும்பகோணம் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியில் வசித்து வருபவர் கோகிலா (வயது 50). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் இடைவேளை நேரத்தில் கழிவறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, சிறுவனை பின்தொடர்ந்து சென்ற கோகிலா, சிறுவனிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் கடந்த 16-ஆம் தேதி நடந்துள்ளது. World Sparrow Day 2024: “புல்லினங்கால்… ஓஒ… புல்லினங்கால்… உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…” இன்று உலக சிட்டுக்குருவி தினம்..!

மேலும், இதனைப்பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்றும் சிறுவனை மிரட்டியுள்ளார். அந்த சிறுவன் வீட்டிற்கு சென்ற உடனே தனது அண்ணனிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளார். மேலும், இச்சம்பவம் சிறுவனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கோகிலா மீது புகார் அளித்தனர்.

இதனையடுத்து, புகாரின்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement