Boy Abuse (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 22, புதுக்கோட்டை (Pudukkottai News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் மாரீஸ்வரன் (வயது 21). இவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்டையூரில் உள்ள விடுதியில் தங்கி, திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில், முகநூல் மூலமாக அரியமங்கலத்தை சேர்ந்த மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாரீஸ்வரனும் அவரது முகநூல் நண்பரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) இரவு மண்டையூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மாரீஸ்வரன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். Today's Latest News In Tamil: இந்திய கிரிக்கெட் அணி வெற்றி முதல் ராதிகாவின் தாயார் மரணம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!

தற்கொலை கடிதம்:

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அக்கடிதத்தில் அரியமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் ரீதியாக தன்னை தொந்தரவு செய்து வந்ததாகவும், அதனை புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மிரட்டி வாங்கியதோடு, தான் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்துக் கொண்டதாகவும் அவர் எழுதியுள்ளார். இதனால், தான் மிகுந்த மனவேதனையில் ஆளானதாகவும், தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

5 பேர் கைது:

இதனையடுத்து, தற்கொலை செய்துகொண்ட மாணவரின் செல்போன் மற்றும் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவரின் முகநூல் நண்பர் இளங்கோவன் (வயது 20), அவரது நண்பர்கள் ஆண்டனி சஞ்சய் (வயது 22), முத்துராஜா (வயது 21), பாண்டீஸ்வரன் (வயது 20), பவித்ரன் (வயது 20) ஆகிய 5 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.