மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010-ல் இருந்து உலக சிட்டுக்குருவிகள் (World Sparrow Day) நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
எப்படி சிட்டுக்குருவி குறைந்தது?: எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. முன்பெல்லாம் கிராமங்களிலும் வீடுகளிலும் தென்னங்கீற்றால் பந்தல் அமைத்திருந்தனர். அதில் சிட்டுக்குருவிகள் வீடு கட்டி வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும் , கான்கிரீட் கட்டிடங்களாகவும் மாறிவிட்டதால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போனது. Tasty Cake Recipes: வெண்ணிலா சீஸ் கேக்.. செய்வது ரொம்ப சுலபம்..!
உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவியினங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன. உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, உரிமையானது.