Wintrack INC Harassment (Photo Credit: @wintrackinc X)

அக்டோபர் 03, எண்ணூர் (Chennai News): சென்னையில் வின்டிராக் நிறுவனம் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வரும் பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்ததாக தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்துக்கொண்டு வர, ரூ.1 இலட்சம் பணம் சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. Snapchat Memories: ஸ்டோரேஜ் சேவைக்கு கட்டணம்.. ஸ்னாப்சாட் பயனர்களுக்கு ஷாக்.!

வின்டிராக் நிறுவனம் புகார் & விசாரணைக்கு உத்தரவு (Wintrack Complaint about Chennai Harbor Bribery Issue):

இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர், தற்போது தங்களின் சமூக வலைப்பக்கத்தில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுடன் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. மேலும், மத்திய அமைச்சகமும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை சென்னை துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். விசாரணையின் முடிவிலேயே அனைவருக்கும் உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்டிராக் நிறுவன தலைமை அதிகாரி சென்னை சுங்கத்துறை மீது குற்றச்சாட்டு: