வானிலை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழ்நாட்டில் வெளுத்துவாங்கப்போகுது மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

நவம்பர் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ மிக லேசான மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாமக்கல்லில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, ஈரோட்டில் 16.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில் நேற்று தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி, இன்று (10-11-2024) காலை 08:30 மணி அளவில்‌ அதே பகுதிகளில்‌ நிலவுகிறது. இதன்‌ காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில்‌ தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌. இது அதற்கடுத்த இரு தினங்களில்‌ மேற்கு திசையில்‌, தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்‌.

இன்றைய வானிலை (Today Weather):

10.11.2024 அன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. Tiruvannamalai: ஆசீர்வாதம் பெயரில் கட்டாய வழிப்பறி., புதுமணத்தம்பதி மீது தாக்குதல்; திருநங்கைகளின் அதிர்ச்சி செயல்..! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

11.11.2024 அன்று கடலோர தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, உள்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்களிலும்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது. 12.11.2024 அன்று தமிழகத்இல்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.13 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

13.11.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கடலூர்‌,

தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி மாவட்டங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.14 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

14.11.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,

கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சி வகங்கை, ராமநாதபுரம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.15 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

15.11.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 16.11.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தலைநகர் வானிலை நிலவரம் (Chennai Weather Today):

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33” செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

10.11.2024 அன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

11.11.2024 முதல்‌ 13.11.2024 வரையில், தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

10.11.2024 மற்றும்‌ 11.11.2024 வரையில் தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

12.11.2024 மற்றும்‌ 13.11.2024 வரையில் தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.