TVK Vijay: செயல்மொழியே தவெக அரசியலுக்கான தாய்மொழி: மாநாடு குறித்து நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டிப்பிடித்து மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என விஜயின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20, நீலாங்கரை (Chennai News): தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக, 2026 தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தலை நோக்கி, அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் (TVK Vijay), தனது கட்சியின் முதல் மாநாட்டினை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி (TVK Party Campaign), வெற்றிச் சாலை பகுதியில், அக்.27ம் தேதி நடத்துகிறார். இந்த மாநாட்டுக்கு தேவையான அனுமதி அரசின் மூலம் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, அங்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் முதல் மாநாடு குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பே விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தலுடன் ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
முதல் மாநாடு - இரண்டாவது கடிதம்:
இந்நிலையில், இன்று மாநாடு தொடர்பாக இரண்டாவது அறிவுறுத்தல் கடிதத்தை விஜய் தனது தொண்டர்களுக்காக வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புக் கடிதத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் ௮றிவிக்கப்பட்டு்ள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.
வாய்மொழி வித்தை நம் வேலையில்லை:
அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான ௮௧ உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. Vijaya Prabhakaran: ஹிந்தி படி, படிக்காதான்னு இரு தரப்பு.. நாம செய்ய வேண்டியது என்ன?.. தேமுதிக விஜய பிரபாகரன் பளீச் பேச்சு.!
மனம் தவம் கிடக்கிறது:
மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
கர்ப்பிணிகள், சிறார்கள், முதியவர்கள் வீட்டில் இருந்து பாருங்கள்:
இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.
சிரமம் வேண்டாமே நண்பா-நண்பி:
ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதீயாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், ௮வர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் ௮வர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
விவேக சாலையில் சந்திப்போம்:
மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும்
காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக மையும். அரசியலுக்கும் ௮து பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே ஒருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டூக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். தோழமையுடன், தமிழக வெற்றிக் கழகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பான இரண்டாவது அறிக்கை:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)