Actor Sivakarthikyen: தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் வகையில் பலரும் முன்வந்து உதவும் நிலையில், அரசுக்கு ரூ.10 இலட்சம் பணத்தை சிவகார்த்திகேயன் வழங்கினார்.
டிசம்பர் 04, தலைமை செயலகம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவாகி, தமிழகத்தில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடந்த ஃபெஞ்சல் (Fengal Cyclone) புயல் காரணமாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரியில் 30 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டித்தீர்த்தது. இரண்டு நாட்கள் புயலின் மழை கொடுக்கும் மேகங்களில் இருந்து பெய்த மழை, கிருஷ்ணகிரியில் தொடங்கி கடலூர் வரை மக்களை திண்டாட வைத்தது. Hear Wrenching Tragedy: தென்னை மரத்தில் தேங்காய் பறித்தவருக்கு காத்திருந்த எமன்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்..!
வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மாவட்டங்கள்:
குறிப்பாக சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை, அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது. இதனால் 52 ஆண்டுகளுக்கு பின்னர் 2.50+ இலட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென்பெண்ணை, கெடிலம், சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் நீர் புகுந்தது. கடலூரும் வெள்ளத்தின் பிடியில் சிக்கிக்கொண்டது. தற்போது வெள்ளம் படிப்படியாக குறைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி செயல்:
அரசு சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மக்களின் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதிஉதவி வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் உயிரிழந்தோருக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடும், நெற்பயிர்களுக்கு, பசுமாடு, ஆடுகளுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தனது பங்களிப்பை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு, அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 இலட்சம் காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.
துணை முதல்வரிடம் ரூ.10 இலட்சம் காசோலை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்: