Chennai Police: சென்னையில் குவிக்கப்படும் 20,500 காவலர்கள்., புத்தாண்டு அன்று முக்கிய தடை - சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு.!

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்து, ஒலிபெருக்கி வைத்து அலப்பறை செய்வோருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Chennai City New Year Celebration | Chennai Police (Photo Credit: @UpdatesChennai / @ShobanaRaviNews / @chennaipolice_ X)

டிசம்பர் 30, சென்னை (Chennai News): தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, 2025 புத்தாண்டு (New Year 2025) கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவிடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்வோரின் பயணத்திற்கு எதுவாக சிறப்பு பேருந்துகள், இரயில் சேவையும் இயக்கப்படுகின்றன. புத்தாண்டை மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை (New Year Celebration in Chennai) சார்பில் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. New Year 2025: "மகிழ்ச்சி பெருக.. மனிதநேயம் சிறக்க.." - புத்தாண்டு பண்டிகை 2025 வாழ்த்துச் செய்தி இதோ..! 

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கத் தடை:

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்தினால், அதற்கு காவல்துறையினரிடம் உரிய முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும், பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தினால், காவல்துறையின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர முழுவதும் பாதுகாப்பு பணியில் 19,000 காவலர்கள், 1,500 ஊர்க்காவல் படை அதிகாரிகள் என மொத்தமாக 20,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள் என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண் அறிவிப்புள்ளார். New Year 2025: புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்; இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே..! 

மெரினாவில் குளிக்கத் தடை:

முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் நாளை (டிச.31, 2024) இரவு முதல், ஜனவரி 01, 2025 வரை சுற்றுலாப் பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மெரினா, இசிஆர் கடற்கரை பகுதியில் ரேஸிங் போன்ற செயலில் ஈடுபட்டாலும், போதையில் வாகனத்தை இயக்கினாலும், அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.