Chennai Corporation Warning: "வீதிகளில் இனி மாடுகள் சுற்றினால் அது எங்கள் சொத்து" - சென்னை மாநகர ஆணையர் உச்சகட்ட எச்சரிக்கை.!
தெருக்களில் அலட்சியமாக அவிழ்த்து விடப்படும் மாடுகளின் காரணமாக சென்னையில் பல விபத்துகள் நடக்கின்றன. சில நேரங்களில் மாடுகள் மிரண்டு மக்களை தாக்குவதால் காயங்கள், உயிரிழப்புகள் வரை செல்கின்றன. இதனால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தயாராகியுள்ளது.
செப்டம்பர் 19, சென்னை (Chennai News): சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன், செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், "மாநகராட்சி பகுதிகளில் தெருவில் அலையும் மாடுகள் மக்களை அச்சுறுத்துகிறது. சில இடங்களில் மூர்க்கத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள், ஒருசில நேரம் காயங்கள் வரை செல்கின்றன.
நேற்று முன்தினம் கூட மாட்டின் உரிமையாளரையே மாடு தாக்கி இருக்கிறது. அவர் மாட்டின் உரிமையாளர் என்பதால் தகவல் எங்களுக்கு புகாராக வரவில்லை என்றாலும், அவரின் மீதான தாக்குதல் குறித்த செய்தி வந்துவிட்டது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க இயலாது. பால் கறக்கும்போது மாடு உங்கள் சொத்து எனில், இனி தெருவில் அவை நடமாடினால் எங்கள் சொத்து என கருதப்படும்.
இனிவரும் நாட்களில் மாடுகள் தெருவில் சுற்றித்திரிந்தால் பிடித்து வைத்து எச்சரித்து குறைந்த அபராத தொகை விதித்து மாடு மீண்டும் வழங்கப்பட்டு வந்தது. இதற்குமேல் அத்தகைய நடவடிக்கை இருக்காது. அபராத தொகை கடுமையாக உயர்த்தப்படவுள்ளது. பிடிக்கப்படும் மாடுகளை வெளிமாவட்டங்களில் உள்ள பண்ணைகளுக்கு அழைத்து செல்ல ஆணையிட ஆலோசனை நடந்து வருகிறது. Dulquer Salmaan in Porsche Magazine: போர்சே கார் நிறுவனத்தின் அட்டை படத்தில் நடிகர் துல்கர் சல்மான்: அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியர்.!
இதனால் தெருவில் மாடுகள் அலைந்து பிடிக்கப்பட்டால், அவற்றை காணவில்லை என மாட்டின் உரிமையாளர் கண்ணீர் வடிக்க கூடாது. நாங்கள் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை பலமுறை ஏற்படுத்திவிட்டோம். இருப்பினும் அலட்சியமாக மாடுகளை நகர்ப்பகுதியில், வீதிகளில் மேய்ச்சலுக்கு திறந்துவிடுகிறார்கள்.
மழைக்காலத்தில் பரவும் நோய்களை ஒழிக்கவும், நீர்களில் கொசு வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் காய்ச்சல், சளி போன்றவை இருந்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் அறிவுத்தப்பட்டுள்ளதது. கொசுவளர்ச்சியை கட்டுப்படுத்தவும் மக்களுக்கு வீடு வீடாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
கொசு பரவும் வகையில் நீரை தேக்கி வைக்கும் வீடுகளுக்கு குடியிருப்பு வகைகளை பிரித்து அபராதம் விதிக்கப்படும். வணிகவளாகங்களுக்கும் கே நிலை தான். முதல் இரண்டு முறை ரூ.200ல் தொடங்கி ரூ.500 வரை விதிக்கப்படும் அபராதம், தவறுகள் தொடரும் பட்சத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சம் வரை செல்லும். ஆகையால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)