School Leave: தொடர் மழை எதிரொலி., சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்று இங்கெல்லாம் வெளுக்கப்போகும் மழை.. விபரம் உள்ளே.!
சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றில் இருந்து மழை தொடருவதால் சென்னையில் மட்டும் பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
நவம்பர் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு & புதுச்சேரியில் நவ.14ம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
இதனிடையே, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழையானது பெய்து வந்தது. இன்று காலை வரை மழை தொடர்ந்து வந்த நிலையில், இன்றும் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காலை 10 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Krishnagiri Shocker: குடிகார கணவனை கூலிப்படை ஏவி கண்டித்த மனைவி.. வினைச்செயல் விபரீதத்தால் கொலைகேசில் சிக்கிய தாய்-மகள்..!
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை (Holidays for schools in Chennai):
இதனையடுத்து, தலைநகர் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக காலை மிதமான மழை பெய்து வருவதால் இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை, அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. Youth Arrested: ஓடும் இரயிலில் பெண் வங்கி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர் கைது.!
அதேநேரத்தில், சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.