Doctor Stabbed in Chennai: "எப்படி இருக்க பாலாஜி?" - நலமுடன் மருத்துவர் பாலாஜி.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ.!

அவர் தான் நலமுடன் இருப்பதாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Guindy Govt Hospital Dr. Balaji Under Treatment (Photo Credit: @Subramanian_ma / @journsuresh X)

நவம்பர் 14, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில், துறைத் தலைவராகவும், மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாத் (Dr Balaji Jegannathan). இவர் நேற்று காலை 10:30 மணியளவில் புறநோயாளிகள் பிரிவில் இருந்தபோது, 25 வயது இளைஞரால் கத்தியால் 7 க்கும் மேற்பட்ட முறை சரமாரியாக குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தாம்பரம் புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். Bus Rammed into Bike: நெல்லை: முந்திச்செல்ல முயன்றதால் விபரீதம் - தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே பலி.! 

மருத்துவர் மீது குற்றச்சாட்டு: 

விக்னேஷின் தாயார் பிரேமா, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மருத்துவர் பாலாஜியிடம், பிரேமா மற்றும் அவரின் குடும்பத்தினர் ஏதேனும் கேட்டால், அவர் ஆங்கிலத்தில் பேசுவதாகவும், கோபமடைந்து திட்டுவதாகவும், கோப்புகளை தூக்கி முகத்தில் வீசுவதாகவும், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என அலைக்கழித்ததாகவும் பிரேமா & அவரின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த அவதூறுகளுக்கு சக மருத்துவர்கள் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.

நலமுடன் மருத்துவர் பாலாஜி: 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பொறுமையை இழந்த விக்னேஷ் மருத்துவரின் முகம், கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று தற்போது உடல்நலம் தேறி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து மக்கள் நலவாழ்வு & மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாக மருத்துவர் நலமுடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர் பாலாஜி நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியீடு:

மருத்துவர் பாலாஜியை தாக்கிவிட்டு, குற்றவாளி எவ்வித சலனமும் இன்றி வரும் காட்சிகள்:

அரசு மருத்துவர், தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த ஆலோசகராக இருப்பதை சுட்டிக்காட்டி பதிவு: