TN Weather Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; காலையிலேயே வெளுத்து வாங்கும் கனமழை.!
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 16, சென்னை (Chennai): தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக (TN Weather ) கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள இலங்கை தெற்கு கடலோர பகுதியில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 16ஆம் தேதியான இன்று அனேக இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. Hair Used As Tie: "இப்போல்லாம் யார் ப்ரோ.. டை போட்றா?" முடியை டை ஆக்கிய பெண்.. வைரலாகும் பேஷன் ட்ரெண்ட்..!
காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 7 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரையில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நேற்று இரவு முதலாகவே பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விடிந்த பின்னரும் மழை தொடருகிறது.