Engaged Women Suicide: திருமணத்திற்கு முன் அவகாசம் கேட்ட மணமகன் - விரக்தியில் மணப்பெண் எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!
ஆகஸ்ட் மாதமே திருமணம் நிச்சியிக்கப்பட்டுவிட்ட நிலையில், பல மாதங்கள் கடந்தும் திருமணத்திற்கு கூடுதல் அவகாசம் கேட்டதால் விரக்தியடைந்த மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிப்ரவரி 04, பாடியநல்லூர்: சென்னையில் உள்ள செங்குன்றம் (Red Hills, Chennai), பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சந்துரு. இவரின் மகள் கனகப்பிரியா (வயது 23). இவர் செங்குன்றம் தனியார் வங்கியில் (Bank Employee) பணியாற்றி வருகிறார்.
கனகப்பிரியாவிற்கும் - அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் (Marriage) செய்ய முடிவெடுத்த பெற்றோர், அதற்காக கடந்த ஆகஸ்ட் மாதமே நிச்சயதார்த்தத்தை (Engaged) முடித்துள்ளனர்.
இதற்கிடையில், மணமகன் வீட்டார் சார்பில் திருமணத்திற்கு (Wedding) சிறிது கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து கடந்த சில நாட்களாகவே கனகப்பிரியா மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். Velachery North Indian Murder: வேளச்சேரியில் வடமாநில இளைஞருடன் சென்னை சிறார்கள் மோதல்.. 7 பேர் கும்பலால் பிழைக்க வந்த தொழிலாளி அடித்தே கொலை.!
இந்த நிலையில், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற கனகப்பிரியா தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை (Suicide by Hanging) செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செங்குன்றம் காவல் துறையினர், கனகப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கனகப்பிரியாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்மணி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 04, 2023 09:05 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)