Weather Update: நீலகிரியில் உறைபனி, பிற மாவட்டங்களில் கடும் பனி - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

நீலகிரியில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Center (Photo Credit: Wikipedia)

ஜனவரி 16, சென்னை: தமிழ்நாட்டிற்கு நல்ல மழைபொழிவை தரும் வடகிழக்கு பருவமழை (NorthEast Mansoon) கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்ந்துபோனது. இயல்பாக பருவமழையின் ஓய்வுக்கு பின்னரே பனிப்பொழிவு (Winter Season) இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் பருவமழை ஓய்ந்துபோவதற்கு முன்பே காலை நேரங்களில் அதிக பனி நிலவியது.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை (Dry Weather) நிலவியது. கடுமையான பனியின் தாக்கம் நீடித்து வந்தது. தற்போதும் அப்படியே வானிலை நிலவுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Kite Festival Death: பச்சிளம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை.. குஜராத் பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் கழுத்து அறுபட்டு துள்ளத்துடிக்க பலி.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் படி, தமிழ்நாட்டின் உள்மாவட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைவாக இருக்கும். ஒருசில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 17, 2023 09:39 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).