TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்; நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் உட்பட சில மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tomorrow Weather (Photo Credit: LatestLY)

ஜூலை 13, சென்னை (Chennai News): தமிழகத்தில் தென்மேற்கு (Southwest Monsoon) பருவமழை தீவிரமடைந்துள்ளது. உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்துள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக 13-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.

14 & 15ம் தேதியில் நிலவரம் என்ன?

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 14 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் இடியும் மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 ஆம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒருசில இடத்திலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Vikravandi ByPoll Results 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்கொடிநாட்டியது திமுக: அன்னியூர் சிவா அமோக வெற்றி.!

சென்னையில் வானிலை நிலவரம்:

பதினாறாம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகம் மட்டும்தான் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

வங்கக்கடலில் சூறாவளிக்காற்று எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும. என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அதேபோல, வங்கக்கடலில் மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதி, வடக்கு அந்தமான் பகுதியில் சூறைக்காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்படுகிறது.