Rain Alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை என்ன? சென்னையில் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

வடதமிழ்நாடு - ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24 மணிநேரத்திற்குள் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

டிசம்பர் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 19-12-2024 இன்று வடகடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, இதர தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யலாம். 20-12-2024 முதல் 24-12-2024 ஆகிய தேதிகள் வரை தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்துள்ளது. Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலேயே கடந்த 24 மணிநேரமாக அசைவற்று அப்படியே நீடிக்கிறது. இது வரும் 24 மணிநேரத்தில் வட தமிழகம் - ஆந்திர எல்லைப்பகுதிகளை நோக்கி நகரும். இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்புகள் உள்ளன. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

சென்னையில் பொன்னேரி, புரசைவாக்கம், மயிலாப்பூர், திருவெற்றியூர் பகுதிகளில் வரும் 2 மணிநேரத்திற்கு மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 மணிநேரத்திற்கு சென்னையில் மழைக்கான வாய்ப்புள்ள இடங்கள்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement