வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
இன்று அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் இருக்கும், மாநில அளவில் இன்று பரவலான மழையை எதிர்கொள்ளலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா - ஒடிசா கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ள காரணத்தால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான (Rain Alert) வாய்ப்புகள் பரவலான நிலை என்ற வகையில் குறைந்து இருக்கிறது. இதனால் அடுத்த ஒரு வாரம் முழுவதும் மாநில அளவில் ஆங்காங்கே பரவலான மழையை மட்டுமே எதிர்பார்க்க இயலும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai RMC) தெரிவித்து இருந்தது.
இன்றைய வானிலை (Today Weather):
22-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். Salem Accident: அரசியல்கட்சித் தலைவர் கான்வேயுடன் பயணித்த கார் - டூவீலர் மோதி பயங்கரம்; கூலித்தொழிலாளி பலி.!
காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்பு:
இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.