வானிலை: இன்று சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இதனால் தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 14, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 - ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். வானிலை: இன்று 22, நாளை 19 மாவட்டங்களில் கனமழை; சென்னை மக்களே மிககவனம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இன்று இடி-மின்னலுடன் மழை (Weather Update):
தமிழ்நாட்டுக்கு பெருமழையை வரி வழங்கும் வடகிழக்கு (Northeast Monsoon) பருவமழை இன்னும் 2 நாட்களில், அக்.15 அல்லது அக்.16 ம் தேதி வாக்கில் தொடங்கும் சாதக சூழல் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வரும் ஒரு வாரத்திற்கு மழை தொடரும். இன்று முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்.14ம் தேதியான இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் (Today Rain Alert):
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (Red Alert Tamilnadu), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் நான்கு நாட்களுக்கு சென்னையில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் தொடர்பான புகார்களுக்கு / அவசர அழைப்புகளுக்கு 1913 என்ற மாநில அரசின் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.