IPL Auction 2025 Live

Weather Update: 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, மீனவர்களுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும், பெருவாரியான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Center (Photo Credit: Wikipedia)

ஜனவரி 19, சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Center, Chennai) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "19 ஆம் தேதி மற்றும் 20-ம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை (Dry Weather) நிலவும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகும். ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் ஏற்படும்.

நீலகிரி, கோயம்புத்தூர் (Nigiris, Coimbatore) மாவட்டங்களில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. 21 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 22 மற்றும் 23 ஆம் தேதியை பொறுத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா & அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். Erode By Poll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அதிமுகவா? தமிழ் மாநில காங்கிரஸா?.. ஜி.கே வாசன் பரபரப்பு பேட்டி.!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 19 ஆம் தேதி மற்றும் 20ம் தேதியில் வங்காள விரிகுடா, அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரையில் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 02:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).