Velachery: தனியாக இருந்த பெண்களிடம் சில்மிஷம்; மக்கள் சுற்றிவளைத்ததால் கால்வாயில் குதித்து திக்குமுக்காடிய இளைஞர்.!

பெண்களிடம் சில்மிஷம் செய்த வடமாநில தொழிலாளி, பொதுமக்கள் தன்னை அடிப்பார்களோ என்ற பயத்தில் தப்பி ஓடி கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் நடந்தது.

Velachery Incident (Photo Credit: Rail Info India / Twitter)

ஜூலை 20 , வேளச்சேரி (Chennai News): சென்னையில் உள்ள வேளச்சேரி, கைவேலி பகுதியில் இருக்கும் கால்வாயில் இளைஞர் சிக்கி, மேலே வரத்தெரியாமல் தவிப்பதாக நள்ளிரவு நேரத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கயிறு கட்டி கால்வாயில் சிக்கி இருந்த இளைஞரை மீட்டனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரேம் தேவ என்பது தெரியவந்தது.

அவர் ஆதம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு கைவேலி பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். Chinese Manjha Killed Child: சீன மாஞ்சா நூல் அறுத்து 7 வயது சிறுமி பரிதாப பலி; பெற்றோர் கண்முன் நடந்த கொடூரம்.!

அப்போது, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பிரேம் தேவை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் பயந்துபோன பிரேம் தேவ், மக்கள் தன்னை தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பி சென்றபோது கால்வாயில் தவறி விழுந்து தவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர், பிரேம் தேவை வேளச்சேரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பிரேம் தேவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement