IPL Auction 2025 Live

Chennai Water Company: தரமில்லாத தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்; தலைவர் பார்ப்பார் என கொக்கரித்த வி.சி.க பிரமுகர்.!

வி.சி.க பிரமுகரால் நடத்தப்படும் குடிநீர் கம்பெனி என்பதை மேற்கோளிட்டுக்காண்பிக்க, தரமில்லாத தண்ணீர் கேன்களை விநியோகம் செய்த விசிக பிரமுகர், தலைவர் இதனை பார்ப்பார் என பேசி சர்ச்சையில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Water Cane File Pic (Photo Credit: Justdial)

மே 24, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கம், சின்மயா நகர் பகுதியில் ஆஸ்மா அக்வா என்ற குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த குடிநீர் நிறுவனத்தில் இன்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, குடிநீரின் தரம் மற்றும் தயாரிப்பு முறைகள் சோதனை செய்யப்பட்டன. ஆய்வில் ISI உரிமம் புதுப்பிக்கப்படாதது உறுதியான நிலையில், குடிநீர் தயாரிப்பு செய்யும் நிறுவனத்திடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டிருந்தனர்.

பரிசோதனை கருவிகள் நிகழ்விடத்தில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை பல நாட்களாக சோதனை செய்யப்படவில்லை. குடிநீர் பரிசோதனை செய்யும் கருவியை உபயோகம் செய்யாமல் இருந்ததால், அவை புறாக்களின் வாழிடமாக மாறி, புறா ஒன்று இறந்தும் இறந்துள்ளது அம்பலமானது. Adhir Ranjan Chowdhury Controversial Remarks On PM Modi: பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்.. கொந்தளிக்கும் பாஜக தொண்டர்கள்..!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பல கேள்விகள் எழுப்பிய நிலையில், அங்குள்ள வேதியியல் பொருட்கள் காலாவதியாகி 10 ஆண்டுகள் கடந்தும் உபயோகம் செய்யப்பட்டு வந்தவை உறுதி செய்யப்பட்டுள்ளன. சோதனையின் முடிவு வரை அதிகாரிகளுக்கு பல அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இதனால் இறுதிக்கட்டத்தில் அதிகாரிகள் வீணாகிய தண்ணீர் கேன்களை சுத்தியல் கொண்டு உடைத்து நொறுக்கினர். இறுதியில் தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, அதனை நடத்தி வந்த உரிமையாளர் தன்னை வி.சி.க பிரமுகர் என அடையாளம் காண்பித்துக்கொண்டு, தலைவர் தொலைக்காட்சியில் இதனை பார்ப்பார் என பேசினார்.