Parangimalai Sathya: தமிழகத்தை உலுக்கிய கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு.!
அதன்படி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 30, அல்லிக்குளம் (Chennai News): சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவி சத்யா (வயது 20), கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி கொலை செய்யப்பட்டார். மாணவி தனது கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை இரயில் நிலையம் வந்திருந்த நிலையில், தாம்பரம் நோக்கி செல்லும் இரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டார். விசாரணையில், அவரை காதலித்து வந்த சதிஷ் என்பவர், மாணவி தன்னிடம் பேசாததால் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி சார்பில் நடத்தப்பட்டது. மேலும், மகள் பலியான துக்கம் தாளாமல், அவரின் தந்தையும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தமிழகத்தை உலுக்கிய வழக்கு:
கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதறவைத்த குற்றச்செயலில், குற்றவாளி சதீஷுக்கு தற்போது வரை நீதிமன்றத்தின் சார்பில் ஜாமின் வழங்கப்படவில்லை. சிபிசிஐடி அதிகாரிகள் துரிதமான விசாரணையை முன்னெடுத்த நிலையில், இறுதி விசாரணையும் நிறைவுபெற்று, கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதறவைத்த குற்றச்செயலில், குற்றவாளி சதீஷுக்கு தற்போது வரை நீதிமன்றத்தின் சார்பில் ஜாமின் வழங்கப்படவில்லை. சிபிசிஐடி அதிகாரிகள் துரிதமான விசாரணையை முன்னெடுத்த நிலையில், இறுதி விசாரணையும் நிறைவுபெற்றது. மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கு, சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடைபெற்று வந்தது. Chennai Police: சென்னையில் குவிக்கப்படும் 19,000 காவலர்கள்., புத்தாண்டு அன்று முக்கிய தடை - சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு.!
70 சாட்சியங்கள் விசாரிப்பு:
வழக்கில் 70 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் சதீஷ் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படவே, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, வரும் டிச.30, 2024 அன்று தண்டனை தொடர்பான விபரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். வழக்கில் 70 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, சதீஷ் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படவே, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, வரும் டிச.30, 2024 அன்று தண்டனை தொடர்பான விபரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
சதீஷுக்கு மரண தண்டனை:
இந்நிலையில், காதலியை இரயில் முன் தள்ளி கொடூரமாக கொலை செய்த காதலன் சதீஷுக்கு, சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் மரணம் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. உள்நோக்கத்துடன் கொலை செய்த சதீஷை, சாகும் வரை தூக்கிலிட சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. ரூ.10 ஆயிரம் அபராதம், 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்ட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு வழக்கின் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின் மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.