IPL Auction 2025 Live

College Girl Addicted to BTS: பிடிஎஸ் என்ற கொரிய பாடல் மோகம் – கல்லூரி மாணவிகள் அடிமை..!

கொரிய பாடல் மோகத்தால் அதற்கு அடிமையாகி கல்லூரி மாணவி விபரீத முடிவு என மனநல ஆலோசகர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

BTS | Girl Love File Pic (Photo Credit: Wikipedia Pixabay)

மார்ச் 13, சென்னை (Chennai News): தற்போது உள்ள காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் அனைவரும் பல்வேறு விதத்தில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி உள்ளனர். அந்த வகையில், பிடிஎஸ் (BTS) என்ற கொரிய பாடலுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களின் வீடியோக்களை செல்போனில் அதிகம் பார்த்து, அதில் அவர்கள் முழுவதுமாக அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலும், இளம்பெண்கள் அதில் அதீத ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார்கள். Young Girl Death: 21 வயது பெண் மரணம் – ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் பரிதாபம்..!

பிடிஎஸ் என்ற கொரிய பாடகர்களான ஆர்எம், ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங் கூக் என இவர்களின்மேல் நம் இளம் தலைமுறை பெண்கள் அடிமையாகி விட்டனர். இந்த இளம் இசை கலைஞர்களின் உடைகள், நடனம் மற்றும் சிகை அலங்காரம் என அனைத்தும் இன்றைய இளம் பெண்களை வெகுவாக கவர்கிறது.

பெரும்பாலும், பள்ளியில் படிக்கும் மாணவிகளும் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் இதற்கு அடிமையாகி, தனக்கு வரப்போகும் கணவன் இவர்களில் ஒருவரை போன்று இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். மேலும், பல கல்லூரி மாணவிகள் இந்த வீடியோக்களை தொடர்ந்து பார்த்து அதில் இருந்து வெளியே வர இயலாமல் அவர்களின் மீது அதீத ஆசை கொண்டு உள்ளனர்.

தற்போது, மனநல மருத்துவர் இளையராஜா அவர்கள் ஒரு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அதில், பிடிஎஸ் குழுவினரின் வீடியோக்களை கடந்த சில வருடங்களாக மணிக்கணக்கில் பார்த்து வந்த கல்லூரி மாணவி அதற்கு அடிமையாகி, தான் திருமணம் செய்து கொள்ள ஒரு பிடிஎஸ் கொரிய மாப்பிள்ளை தான் வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த மாணவியை தன்னிடம் அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.

மேலும், படிப்பையும் எதிர்காலத்தையும் மறந்து, பிடிஎஸ் வீடியோக்களை பார்த்து அதில் அடிமையாகி உள்ள மாணவியிடம் பல ஆலோசனைகளை வழங்கி வருவதோடும், அதில் இருந்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு மேலும் அவர் கூறுகையில், இணையத்தில் வரும் எதையும் ஒரு 45 நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்த தொடங்கினால், அதற்கு நாம் மறைமுகமாக அடிமையாகி விட்டோம் என்றும், அதில் சிக்கிக்கொண்டு வெளியே வர இயலாமல் பல்வேறு தவறான சிந்தனைகளையும் கற்பனைகளையும் உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என வேதனையாக கூறியுள்ளார்.