IPL Auction 2025 Live

Pongal Sugarcane: "ரேஷன் கடைகளில் கரும்பு வழங்க உத்தரவிடுக" - கடலூர் விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.!

"பொங்கலும்-கரும்பும் பிரித்து பார்க்க இயலாத ஒன்று என்பதால், நியாய விலைக்கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chennai HighCourt Sugar Cane (PC: Wikimedia Commons and Pixabay)

டிசம்பர் 27, சென்னை: "பொங்கலும்-கரும்பும் (Pongal Festival With Sugarcane) பிரித்து பார்க்க இயலாத ஒன்று என்பதால்,  நியாய விலைக்கடைகள் (Ration Card) வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களால் பொங்கல் (Pongal Festival) பண்டிகையானது வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும். அன்றைய நாளில் கரும்புகள் தமிழகமெங்கும் உள்ளவர்களால் வாங்கி உபயோகம் செய்யப்படும். தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்ந்து வழங்கும்.

கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில், நடப்பு ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் என எந்த பட்டியலும் இல்லாமல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. Leopard Attack: வேலியை தாண்டி பாய்ந்து காரில் மோதி பதறவைத்த சிறுத்தை.. ஆடிப்போன ஆம்னி வேன் ஓட்டுநர்.. வைரல் வீடியோ.! 

இதனால் கரும்பு விளைவித்த விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுதொகுப்போடு கரும்பை சேர்க்க வேண்டும். அதனை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய கரும்பு கொள்முதலை தொடங்க வேண்டும் என பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கரும்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்காத காரணத்தால், "பொங்கல் பரிசோடு கரும்பும் வழங்க வேண்டும். கரும்பும் பொங்கலும் பிரித்து பார்க்க இயலாதது" என கடலூர் மாவட்ட விவசாயி இராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை நாளை நீதிபதிகள் அமர்வுக்கு முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் பொங்கல் தொகுப்போடு கரும்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 02:27 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).