Cyclone Fengal: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்..!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 29, சென்னை (Chennai News): வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் அது நாகப்பட்டினத்திலிருந்து 330 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தூரத்திலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, நாளை காலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (Pradeep John), காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக பதிவிட்டுள்ளர். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில் வானிலை புகைப்படங்களை குறிப்பிட்டு, ”மேகங்களை கவனியுங்கள், அதன் அமைப்பு தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தீவிரமடையும் அதன் வலிமையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதோ.!

இன்னும் காற்றின் வேகம் அதிகரிக்காது. ஆனால், மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. நண்பகல் வேளையில் மேகங்கள் சூழ தொடங்குவதால் மழை தொடங்கும். மாலை மற்றும் இரவு வரை மழை பொழியும் வாய்ப்புள்ளது. 29 முதல் 30-ம் தேதி வரை சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு முதல் மரக்கண்ணம் வரையிலான கடலோரப் பகுதிகளில் மிக கனமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மழை குறித்து கண்காணிப்பு தேவை. இந்த மழை தீவிரம் குறித்து வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.” என பதிவிட்டுள்ளார்.