Cyclone Fengal: உருவானது ஃபெங்கல் புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெங்கல் புயல் உருவானது.
நவம்பர் 29, சென்னை (Chennai News): வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த பயுலானது, நாளை மதியம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. Road Accident: கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பா? உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதற்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.