DMK MP Kanimozhi: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்., "நெஞ்சமே பதறுது" - கனிமொழி கடும் கண்டனம்.!

பெண்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது கடமை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

DMK Kanmozhi (Photo Credit: @Kanimozhi X)

டிசம்பர் 26, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna Unviersity), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, மெக்கானிக்கல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தன்னுடன் நான்காம் ஆண்டு பயின்று மாணவரை, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது இருவரும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையான பணியில் சந்தித்துக்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த டிச.23 அன்று இரவு உணவு சாப்பிட்ட காதல் ஜோடி, அங்குள்ள தனிமை பகுதியில் சந்தித்துக்கொண்டது. அப்போது, இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர், காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி, காதலனை அடித்து துரத்திவிட்டுள்ளார்.

காதல் ஜோடிகளை குறிவைத்து அதிர்ச்சி செயல்:

பின் கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தியவர், வீடியோ எடுத்து, பாலியல் சீண்டல் & பலாத்காரம் செய்துள்ளார். அதனையும் வீடியோ எடுத்து வைத்து, தான் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயம் குறித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றவாளியான 37 வயதுடைய ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன், தனிமைக்கு செல்லும் ஜோடிகளை குறிவைத்து, இவ்வாறான அதிர்ச்சி செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது. ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடனடி கடும் தண்டனை உறுதி:

இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி (DMK Kanimozhi) தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளப்பக்கத்தில், "சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்" என தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி பதிவு செய்துள்ள கண்டப்பதிவு: