Madurai Arapalayam Bus Stand: மதுரை மக்களே உஷார்.. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பணி.. போக்குவரத்து மாற்றம்..!

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலைய பணியால் இன்று முதல் ஐந்து நாட்கள் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Madurai Arapalayam Bus Stand (Photo Credit: @மதுரைமக்கள்360 FB)

பிப்ரவரி 05, மதுரை (Madurai): மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் தளம் அமைப்பு, கழிப்பறை பகுதிகளில் மராமத்து பணிகள் துவங்கியுள்ளதால் இன்று முதல் (பிப்., 5) ஐந்து நாட்கள் இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்: அதன்படி கோவை மற்றும் திருப்பூர் பேருந்துகள் பாத்திமா கல்லூரியில் இருந்து இ எஸ் ஐ மருத்துவமனை, தத்தனேரி பாலம் வழியாக வரும். மேலும் அப்பேருந்துகள் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் அகர்வால் மருத்துவமனை, குரு தியேட்டர் வழியாக செல்லும். தொடர்ந்து இப்பேருந்துகள் ஜல்லிக்கட்டு காளை ரவுண்டானா தெற்கு பகுதி முதல் ஆற்றங்கரை சாலை வரை நிற்கும்.

அதேபோன்று திண்டுக்கல், சேலம், ஈரோடு, பழனி செல்லும் பேருந்துகள், பாத்திமா கல்லூரி, இ எஸ் ஐ மருத்துவமனை, தத்தனேரி பாலம், ரவுண்டானா, ஆற்றுப் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக வரும். அப்பேருந்துகள் பாத்திமா கல்லூரி, இ எஸ் ஐ மருத்துவமனை, தத்தனேரி பாலம் வழியாக செல்லும். மேலும் அப்பேருந்துகள் ஜல்லிக்கட்டு காளை ரவுண்டானா கிழக்கு பகுதி முதல் ஆற்றங்கரை சாலை பகுதி வரை நிற்கும். Madurai Shocker: "அடிச்ச போதை பத்தலை, காசு கொடு" - தாயை கொடூரமாக கொன்ற மகன்.. கடைசி விவசாயி திரைப்பட புகழ் நடிகைக்கு சோகம்.!

தொடர்ந்து தேனி, கம்பம், குமுளி பேருந்துகள் காளவாசல் முதல் அரசரடி, ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் வழியே வரும். அப்பேருந்துகள் ஆற்றுப் பாலம், குரு தியேட்டர், காளவாசல் வழியே செல்லும். மேலும் அவைகள் ஜல்லிக்கட்டு காளை ரவுண்டானா மேற்கு பகுதி முதல் ஆற்றங்கரை சாலை பகுதி வரை நிற்கும்.

அதேபோன்று பெரிய குளம் பேருந்துகள் பாத்திமா கல்லூரி, இ எஸ் ஐ மருத்துவமனை, தத்தனேரி பாலம் வழியாக வரும். அப்பேருந்துகள் பாத்திமா கல்லூரி, இ எஸ் ஐ மருத்துவமனை, தத்தனேரி பாலம் வழியாக செல்லும். மேலும் அவைகள் ஜல்லிக்கட்டு காளை ரவுண்டானா மேற்கு பகுதி முதல் ஆற்றங்கரை சாலை பகுதி வரை நிற்கும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement