Telangana Accident News Today Visual From Spot (Photo Credit: @NewsMeter_In X)

நவம்பர் 03, விக்ராபத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விக்ராபத் மாவட்டத்தில், இன்று ஹைதராபாத் - பீஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநில அரசு பேருந்தும் - கிராவல் லோடு ஏற்றி வந்த கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு வாகனங்களும் எதிரெதிர் திசையில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதால், பேருந்தின் பாகங்கள் நொறுங்கிப்போயின. இதனால் இடிபாடுகளில் சிக்கி பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.! 

முந்திச்செல்ல முயன்று சோகம்:

இந்த பேருந்து தாண்டரில் இருந்து செவேலா என்ற பகுதிக்கு சென்றுகொண்டு இருந்தது. லாரி ஓட்டுநர் ஆபத்தான வகையில் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றனர். சுமார் 40 பயணிகள் பேருந்தில் பயணம் செய்த நிலையில், அவர்களில் 16 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும், 8 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்வர் இரங்கல்:

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். மேலும், விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார். சமீபத்தில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி பயணம் செய்த தனியார் ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கி 23 பேர் உயிருடன் எரிந்து பலியாகி இருந்தனர். அந்த துயரம் அடங்குவதற்குள், அடுத்த சோகம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காணொளி. பயணிகள் மீது ஜல்லி கற்கள் சிதறி இருந்தன. முதலில் உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பதறவைக்கும் காணொளி: