![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/02/Liquor-Crime-File-Pic-Photo-Credit-Pixabay-380x214.jpg)
பிப்ரவரி 05, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் காசம்மாள். இவரின் மூத்த மகன் நமகோடி. மது & கஞ்சா போதைக்கு அடிமையான நமகோடி, 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்து தாயுடன் தற்போது வசித்து வருகிறார். எப்போதும் போதையிலேயே ஊரைச்சுற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று நமகோடி தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்தவர் தனது தாயை அடித்தே கொலை செய்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கசம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். IND Vs ENG Test: இமாலய இலக்கை நெருங்குமா இங்கிலாந்து?.. நாளை நடக்கப்போவது என்ன?..!
![](https://cmstamil.letsly.in/wp-content/uploads/2023/07/Crime-Photo-Credit-Pixabay.jpg)
கொடூரமாக அடித்தே கொலை: விசாரணையில், சம்பவத்தன்று ஏற்கனவே மதுபோதையில் உறங்கிய நமகோடி, அதிகாலை 3 மணியளவில் தனது தாயாரை எழுப்பி கூடுதல் போதைக்காக பணம் கேட்டுள்ளார். தாய் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நமகோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். பலியான மூதாட்டி காசம்மாள் நடிகர் விஜய் சேதுபதியின் கடைக்கோடி விவசாயி திரைப்படத்தில், கதாநாயகனுக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.