Electrocution Death: சென்னையில் வடமாநில தொழிலாளி பலி; மின்சாரம் தாக்கி சோகம்.! ஃபெங்கால் புயல் முதல் மரணம்.!
முத்தியால்பேட்டை பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இளைஞர், மின்கம்பத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
நவம்பர் 30, முத்தியால்பேட்டை (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கால் புயலாக (Fengal Cyclone) வலுப்பெற்று, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கிறது. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டு, மணிக்கு 12 - 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. Velachery to Beach Train: சென்னை கடற்கரை - வேளச்சேரி புறநகர் இரயில் சேவை ரத்து., உதவி எண்கள் அறிவிப்பு.. இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.!
மின்சாரம் தாக்கி பலி (Electrocution Death):
சென்னையில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வடமாநில இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. சென்னையில் உள்ள பிராட்வே, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி சந்தன். இவர் இன்று ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்தின் வெளியே மின்சார கம்பி ஒன்று இருந்த நிலையில், அதில் மின்சாரம் கசிந்ததாக தெரியவருகிறது. இதனை அறியாமல் மின்கம்பம் மீது கைவைத்த சந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை காவல்துறை அதிகாரிகள் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.