Chennai Food Festival: சென்னை மக்களே ரெடியா? இன்றுமுதல் மெரினாவில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..!
இன்று மாலை 4 மணிக்கு மேல், நாளை மற்றும் நாளை மறுநாள் என மதியம் 12 மணிக்கு மேல் சென்னை மெரினா கடற்கரையில் உணவுத்திருவிழா நடைபெறுகிறது.
டிசம்பர் 20, மெரினா (Chennai News): தமிழ்நாடு முழுவதும் உணவுத்திருவிழா பண்டிகை போல கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த உணவுத்திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பாரம்பரிய வகையிலான உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். இதன் வாயிலாக பாரம்பரியம் முதல் பல்சுவைகளையும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனுபவிக்க இயலும். முன்னதாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அரசு, தனியார் பங்களிப்புடன் உணவுத் திருவிழாக்கள் நடைபெற்றது.
சென்னை மெரினா உணவுத்திருவிழா:
இந்நிலையில், இன்று முதல் சென்னையில் உணவுத்திருவிழா (Chennai Food Festival 2024) நடைபெறுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உணவுத்திருவிழா நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழா 43 வகையாக 3 பிரம்மாண்ட அரங்குகளில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் லேடி விலிங்டன் கல்லூரி, ராணி மெரி கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் இலவசமாக வாகன நிறுத்தம் இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர்: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. வேதியியல் ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!
உணவுத்திருவிழா தேதி & நேரம்:
இன்று 20 டிசம்பர் 2024 மாலை 04:00 மணி (Chennai Food Festival Date & Time) முதல் இரவு 08:30 மணி வரையிலும், 21 டிசம்பர் 2024 முதல் 24 டிசம்பர் 2024 வரையில், மதியம் 12:30 மணிமுதல் இரவு 08:30 மணி வரையிலும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவிக்குழுவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
உணவுகளின் சில பட்டியல்:
சைவம், அசைவம் என அனைத்து வகையிலான சத்தான, பாரம்பரியம் மிக்க உணவுகள் காட்சிப்படுத்தப்படும். இந்த உணவுத்திருவிழாவில் சிறப்பு உணவுகளாக கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ பாயில் நோ ஆயில், திருப்பூர் முட்டை ஊத்தப்பம், சிவகங்கை மட்டன் உப்புக்கரி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, மதுரை கறிதோசை, விருதுநகர் கரண்டி ஆம்ப்லேட், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, மயிலாடுதுறை இறால் வடை, சென்னை தயிர் பூரி, காஞ்சிபுரம் கோவில் இட்டலி, நாகப்பட்டினம் மசால் பணியாரம் உட்பட 100 க்கும் மேற்பட்ட உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது.