Chennai Weather Today: நள்ளிரவு முதல் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; குளுகுளு சூழலால் மக்கள் மகிழ்ச்சி.. 10 மணிவரை வெளுத்து வாங்குமாம்.!
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தை அனுபவித்து வந்த சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில், மழை அன்னை நள்ளிரவு முதல் வெளுத்தது வாங்கி வருவதால் குளு குளு சூழல் உண்டாகியுள்ளது.
செப்டம்பர் 21, சென்னை (Chennai): மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வரும் சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனிடையே, நேற்று நள்ளிரவு முதலாக தலைநகர் சென்னையில் (Chennai Weather Today) உள்ள பல்வேறு இடங்களில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்தது.
நள்ளிரவு முதல் கனமழை:
சென்னையில் இருக்கும் பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், மந்தைவெளி, அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு பின்பும் மழை பெய்து வருவதால், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் மக்கள் துயரடைந்து வந்த நிலையில், இன்று குளுகுளு சூழலை அனுபவிக்க தொடங்கினர்.
வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல்:
இதனிடையே, வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரி ராஜா ராமசாமி, வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் புரட்டாசி மாதம் தொடங்கியபின், வடகிழக்கு பருவமழைக்கான சாதக சூழல் தமிழ்நாட்டில் உண்டாகி இருக்கிறது.
காலை 10 மணிவரை மழை:
இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் குறித்து தனியார் வானிலை மைய அதிகாரி தெரிவித்த தகவல்: